மின்மினி பூச்சி காதல்

இருளின் குளிரில் கீச்சென்று சத்தமிட்டபடி பறக்கும் மின்மினி பூச்சிகளாய் எந்தன் வாழ்வும் அதன் மீதான காதலும்..

Advertisements

மகளின் மீதான பாசம்

அன்பு மகளே..

நீ காண நினைக்கும் உலகத்தை எந்தன் தோள்களின் மீது அமர்ந்து காண்..

விலங்குகளின் மீது சவாரி செய்யும் எண்ணம் இருந்தாலும் என்மீது அமர்ந்து சவாரி செய்..

பணம் எதுவும் வேண்டும் என்றாலும் என் சட்டை பையில் இருந்து எடுத்துக் கொள்..

கவலைகள் உன்னை சூழ்ந்தாலும் உனக்கு பாதுகாப்பாய் நான் இருப்பேன் என்னிடம் சொல்..

எதுவொன்று வேண்டுமானாலும் முடிந்த நேரத்தில் உன்னிடம் தருவேன் வேண்டுமென்பதை கேள்..

உனக்காக இங்கு ஓர் உயிர் என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்..

ஏன் இவை அனைத்தும் சொல்கிறேன் என்றால்,

உன் அழுகையின் குரலை கேட்டவன், அதில் உண்டான மனதின் வலியை உணர்ந்ததினால்.. இருவரின் மனமும் ஒரேமாதிரி சிந்திப்பதினால்..

இதில் இச்சை காதல் என்ற வார்த்தைக்கு இடமேயில்லை.. தந்தை மகளின் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு மட்டுமே..

நான் உன்னிடம் எதிர்பார்ப்பது என்பது ஒன்றே தான்..

எந்நன் கண்கள் காண உந்தன் முகத்தில் சிரிப்பும்..

எந்தன் காதுகள் கேட்க உந்தன் சிரிப்பின் சத்தமும்..

என்றும் என்றென்றும்..

அருண் யாமிழன்.

மகளுக்காக

பாப்பா/ அன்பு குழந்தையே..

உன்னிடம் மட்டுமே தொடர்ந்து பேசி, அனைத்தும் சொல்கிறேன் என்பதை நினைத்து கோபம் கொள்ளாதே…

என் சோகங்களை உணர்ந்து ஆறுதலாய் தட்டி தழுவ, மகளாய் நீ இருப்பாய் எனும் நம்பிக்கையிலே உன்னைத் தொடருகிறேன்…

நீயோ யாரோ ஒருவன் ஏதோ சொல்கிறேன் என்பதை போல சில விடயங்களை கேட்டும், அதற்கென சில பதில்களை தந்தும்,

மறுவினாடியிலே மாயமாக மறைந்து தரையினில் தள்ளிவிட்டும் செல்கிறாயே..

சுற்றி இருக்கும் அடிகளை தாங்கி கொண்டு, நீ இருக்கிறாய் என உன்னைத் தேடி ஓடோடி வர,

நீயும் அடித்தால் வலிகள் தான் தாங்குமோ‌ என் *மனது* ..

என் மனதை வாசிக்க தெரிந்த உனக்கு,

இப்போது வாசிக்க நேரம் இல்லாததை போல, புத்தகத்தைத் தொடாமல் போனதால் தூசி தங்கி கொண்டதே..

எப்போதும் வாசிக்கவில்லை என்றால் கூட, நேரம் கிடைக்கும் வேலைகளில் சற்று வாசித்து,

உன் கருத்துகளையும் அந்த புத்தகத்தில் பதித்து, புத்ததகத்திற்கு சிறப்பினை தந்து விடு பெண்ணே..

உன் கையெழுத்து என் புத்தகத்தை இனியாவது அழகாக்கும் எனும் ஆவலோடு..

புத்தகத்தின் பக்கங்களை உன் எதிரே திருப்பும் படி வைத்திருந்து காத்திருக்கிறேன்..

எழுதுவாய் எனும் நம்பிக்கையோடு..

அருண் யாமிழன்..

தோழியும் மகளுமாக

சிலரின் பெயரினை யாராவது எங்கேனும் அழைக்கப்படும் பொழுது, புரிதல் அறியாது மனம் ஒருவித மகிழ்ச்சியில் தத்தி தாவிடுமே..

அப்படி எந்தன் மனமும் மகிழ்ச்சியில் மூழ்கும் என்றால் அதில் இருக்கும் முதல் பெயர் உமா தேவி என்ற உந்தன் பெயரை கேட்கும் போதல்லவே..

காரணம் என்று எதை கூறினாலும் முடிவில் மகள் என்ற ஒற்றை உறவே ஆரம்பமாய் தொடர்வதினால்..

–அருண் யாமிழன்😍

Pulwama attack இந்திய இராணுவம்

இராணுவ வீரன் அறிவான் என்றேனும் ஒருநாள் என் உயிரை என் தாய் திருநாட்டிற்காக தந்து விட்டு உறங்க செல்வேன் என்று.. ஆனால் அவர்களது பாதுகாப்பில் இங்கே உறங்கும் பலருக்கும் தெரியவில்லை போல நமக்காக தான் அவர்கள் உயிரை பணயம் செய்கிறார்கள் என்று..

இராணுவ வீரர்களின் மரணத்தில் ஓர் போர்க்குணம் எப்போதும் இருக்கும் அதை அரசியலுக்காக அசிங்கபடுத்தும் எச்சைகளை என்னவென்று அழைப்பதோ நானும்..

இராணுவம் இம்மண்ணின் கவசம்.. இராணுவ உயிர் இம்மண்ணின் விதை.. பகை தொடரும்.. தீவிரவாத அமைப்புகள் அழியும் வரை..

#Pulwama attack

தேவ் படம்

சாகச பயணத்தோடு தொடரும் படமாக.. நட்பு முதல் பகுதியும், காதல் மறுபகுதியும் என திரைக்கதை முழுவதுமாக.. கார்த்தி-யின் நடிப்பு மேலும் திரைக்கதைக்கு உயிரோட்டமாக..

ஹாரிஸ் ஜெயராஜின் இசை மீண்டும் திரையுலகில் தடம் பதிக்கும் படி..‌ நகைச்சுவை தேவையான இடங்களுக்கு ஏற்றாற்போல‌..

எதார்த்தமான ஆணுக்கும், எதிர்பார்ப்புகளோடு வாழும் பெண்ணிற்கும் உண்டாகும் காதலும், சண்டையின் பிரிவும் இறுதி நிமிடங்களில்..

மனதிற்கு பிடித்ததை தொடர்ந்து செய்தால் போதும் அதுவே வாழ்க்கை எனும் கருத்தை மறைமுகமாக அணுகியவாறு..

மூன்று மணி நேரம் செலவிட்டு பார்க்கும் அளவிற்கு இரசிக்கும் ப

காய்ச்சலில் மருத்துவம் அவளின் அக்கறையே

கனவினில் அவள்..

எந்தன் தலையை அவளின் மடியின் மீது வைத்து முடி கோதியபடி..

காய்ச்சலுக்கு மருந்தாக..